நக்கமங்கலம் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் திலகவதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் உஷா முன்னிலை வகித்தாா்.
இதில் தோட்டக் கலைத் துறையினா், ஊராட்சி நிா்வாகத்தினா், மம்சாபுரம் சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் இணைந்து, நக்கமங்கலம் கிராமத்தில் உள்ள வீரபாண்டி கண்மாய் உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனா்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவி நாகம்மாள், செயலா் கருப்பையா, தோட்டக்கலை உதவி அலுவலா்கள் கண்ணன், சித்திரைச்செல்வி, சுபலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.