செய்திகள் :

'லண்டன் போய் வந்த அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?' - திருமாவளவன்

post image

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

திருமாவளவன்

அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி அல்ல, பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்காக அவர் பெரிதும் முயற்சிக்கிறார். எனவே ஆளும் கட்சியினர் மீது குற்றம் சாட்டினால் தான் எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கிக் கொள்ள முடியும் என்று அவர் நம்புவது போல தெரிகிறது.

அண்ணாமலை

 கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் கட்சித் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான ஆதாய அரசியல்.

அண்ணாமலைக்கு லண்டன் போய்  வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஏன் சாட்டையால் அடித்துக் கொள்ளும் முடிவை எல்லாம் எடுக்கிறார். இது வருத்தமளிக்கிறது. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது. எதிர்க்கட்சிகள் என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.

திருமாவளவன்

அவர்கள் விரும்புகிற சூதாட்டத்தை நடத்தப் பார்க்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் அதற்கு இடம் கொடுக்காது. அரசியல் ஆதாய கணக்குகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படவில்லை. எங்களை யாரும் மிரட்டுகிற நிலைமையில் நாங்கள் இல்லை.” என்றார்.

Manmohan Singh : 'வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்' - மெளன மொழி பேசியவரின் முழு வரலாறு!

அந்த இரு சம்பவங்கள்!1999 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தெற்கு டெல்லியில் மன்மோகன் சிங் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ்க்காரர்கள் களத்தில் குதித்து தீவிரமாக வேலைப் ப... மேலும் பார்க்க

Manmohan Singh: `BMW வேண்டாமே'- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சி... மேலும் பார்க்க

Annamalai: 'சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு போராட்டம்' - அண்ணாமலை நகர்வுகள் கைகொடுக்குமா?

சமீபத்தில் சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் என பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ம... மேலும் பார்க்க

Manmohan Singh: மோடியின் பணமதிப்பிழப்பும், மன்மோகன் சிங் சொன்னதைப் போலவே சரிந்த GDP-ம்!

மத்தியில் 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் 2016 நவம்பர் 8-ம் தேதி, `இனி ரூ. 500, ரூ. 1000' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியைத் தந்தார் பிரதமர் மோடி. ஒரே நாளில் மொத்த எளிய மக்கள... மேலும் பார்க்க

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப... மேலும் பார்க்க

'அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் துரதிஷ்டவசமானது...' - அமைச்சர் கோவி.செழியன் சொல்வதென்ன?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க