Aus v Ind : 'திணறும் இந்தியா; மீண்டும் ஃபாலோ ஆனை தவிர்க்க போராட்டம்'
Manmohan Singh: மோடியின் பணமதிப்பிழப்பும், மன்மோகன் சிங் சொன்னதைப் போலவே சரிந்த GDP-ம்!
மத்தியில் 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் 2016 நவம்பர் 8-ம் தேதி, `இனி ரூ. 500, ரூ. 1000' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியைத் தந்தார் பிரதமர் மோடி. ஒரே நாளில் மொத்த எளிய மக்களையும் அன்றாட தேவைகளுக்கே வங்கிகள், ஏ.டி.எம் வாசல்களில் வெயிலில் நிற்க வைத்துவிட்டது மோடியின் இந்த அறிவிப்பு.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி கொண்டுவரப்பட்ட இந்த நடவடிக்கை, பெரும் தொழிலதிபர்கள், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் திரை பிரபலங்கள், பணக்காரர்களுக்கு மட்டும் எப்படி ஏ.டி.எம் வாசல்களில் நிற்க வேண்டிய தேவையே இல்லாமல் ஆக்கியது என்பது இன்றும் புதிராகவே இருக்கிறது. மறுபக்கம், நாடு முழுவதும் ஏ.டி.எம் வாசல்களில் கால்கடுக்க நின்றவர்களில் 100-க்கும் மேற்பட்டோரை பலிகொண்டது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இதை, மோடியின் திட்டமிட்ட கொலை என்றே எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
அதோடு, மோடியின் இந்த அறிவிப்பு புதிய ரூ. 2000 நோட்டுகள் மூலம் கறுப்புப் பணத்தைப் பதுக்கப் பணக்காரர்களுக்கு உதவியது என்றும் எதிர்க்கட்சிகள் சாடின. இந்த நிலையில், பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கி கவர்னர், மத்திய நிதியமைச்சர், பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பேசியதை திரும்பிப் பார்க்கலாம்...
* இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது ஒழுங்கமைக்கப்பட்ட சட்டப்பூர்வமாக்கப்பட்ட கொள்ளை.
* இந்த நடவடிக்கை நமது நாணயம், வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும்.
* என் பார்வையில், விவசாய வளர்ச்சி, சிறு தொழில்கள், முறைசாரா துறைகளில் உள்ள அனைவரையும் பணமதிப்பிழப்பு பாதிக்கும். மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடைமுறை மற்றும் வழிமுறைகளையும் கண்டுபிடிக்குமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
* ஒவ்வொரு நாளும் வங்கியின் செயல்பாடு, விதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றியமைப்பது நல்லதல்ல. இது, பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் மோசமான நிலையைப் பிரதிபலிக்கிறது.
* இந்த நடவடிக்கை குறுகிய கால துயரம் என்றாலும் நீண்ட காலத்துக்கு நாட்டுக்கு நல்லதாக இருக்கும் என்று அரசு சொல்வதைக் கேட்கும்போது, `இறுதியில் நாம் அனைவரும் இறக்கத்தான் போகிறோம்' என்று ஜான் கெய்ன்ஸ் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.
* என்னுடைய கணிப்பின்படி இந்த நடவடிக்கையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 2 சதவிகிதம் குறையக்கூடும்.
* பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக 2015-16ல் 7.2 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி (GDP), 2017-18 முதல் காலாண்டில் 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்.
* கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை தீர்வாகாது. நமது வரி முறை, நிலப் பதிவு முறை மற்றும் நிர்வாகத்தை எளிமையாக்குவதே இதற்குச் சிறந்த வழி.
* பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்ததற்குக் காரணம், பெரும்பாலான கறுப்புப் பணம் பணமாக ரூபாய் நோட்டுகளாக இல்லை. வெறும் 6 சதவிகித கறுப்புப் பணம் மட்டுமே ரூபாய் நோட்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது.
2021 மார்ச், Rajiv Gandhi Institute of Development Studies நடத்திய நிகழ்ச்சியில்...
* 2016-ல் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. முறைசாரா துறைகள் சீர்குலைந்திருக்கிறது.
***************
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...