விராலிமலை 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத விளக்கு பூஜை
காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை! கொலையாளி தற்கொலை முயற்சி!
அஸ்ஸாம் மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை குத்திக்கொலை செய்துவிட்டு, கொலையாளி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நஹ்ரொனி பாத் பகுதியில் மெளசுமி கோகொய் (வயது-27) என்ற பெண், இன்று (டிச.26) காலை 11 மணியளவில் அவரது வீட்டின் வாசலின் முன்பு புபன் தாஸ் என்பவரால் தாக்கப்பட்டு வயிறு, கழுத்து கைகள் ஆகிய இடங்களில் கத்தியால் குத்தப்பட்டார்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு குவஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இதையும் படிக்க: கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 ஆமைகள் மீட்பு!
இதனைத் தொடர்ந்து தப்பியோடிய கொலையாளி புபன் தாஸ் தன்னைத் தானே வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரையும் குவஹாட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அறுவை சிக்ச்சை செய்த பின்னர் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையில், மெளசுமியை ஒருதலையாக காதலித்து வந்த புபன் தாஸ் தனது காதலை ஏற்குமாறு அந்தப் பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அதனை அந்த பெண் மறுத்ததினால் இன்று அவர் மெளசுமியை கொலைச் செய்துள்ளார் எனtஹ் தெரியவந்துள்ளது.