விராலிமலை 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத விளக்கு பூஜை
விராலிமலை: விராலிமலை அம்மன் கோவிலில் மார்கழி மாதம் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் நான்காவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் விளக்கு பூஜை செய்து தங்கள் வழிபாட்டை நிறைவேற்றினர்.
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாகும். சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும்,குலதெய்வமாகவும் விளங்கும் அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிக்க |மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
அதன் ஒரு நிகழ்வாக மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் திருவிளக்கு பூஜையின் நான்காவது பூஜை இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அம்மன் பக்தி பாடல்களை பாடி விளக்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற பூஜைகள் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் ஆயுட்காலம் கூடும், கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
விழா ஏற்பாடுகளை சுந்தரம் குருசாமி தலைமையிலான அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.