‘வீடுகளிலிருந்து பம்புசெட்டுகளை இயக்கும் கருவிகளுக்கு மானியம்’
மன்மோகன் சிங் மறைவு: அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடிகள்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
இதையும் படிக்க: மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், அரசுத் தரப்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் 7 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துக்கத்தை அனுசரிக்கும் விதமாக தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை, தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம், தமிழ்நாடு தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.