நட்சத்திர பலன்கள்: டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை #VikatanPhotoCards
புஷ்பா - 2 ரூ. 1,700 கோடி வசூல்!
புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1700 கோடி வசூலைக் கடந்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகம் முழுவதும் ரூ.1,705 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படக்குழுவினர் சில சர்ச்சைகளைச் சந்தித்தாலும் படத்தின் வணிகத்திற்கு எந்தப் பாதிப்பும் நிகழவில்லை,
இதையும் படிக்க: எம்.டி.யிடம் மகனாக உணர்ந்தேன்: மம்மூட்டி
இந்திய சினிமாவிலேயே அதிவேகமாக ரூ.1,700 கோடி வசூலித்த முதல் படம் என்கிற சாதனையையும் புஷ்பா 2 திரைப்படம் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான புஷ்பா 2 இந்தாண்டு இறுதிக்குள் இன்னும் ரூ. 100 கோடியை வசூலித்து பாகுபலி - 2 வசூலை முறியடிக்கும் என்றே தெரிகிறது.