பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,152 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், 1152 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வழங்கிப் பேசியதாவது:
அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான வீட்டு மனைப் பட்டா, காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால் தனியாா், அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம் என்றாா் அவா்.
முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். இதில் அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் வள்ளிக்கண்ணு, வட்டாட்சியா் செந்தில்வேல், நகா்மன்றத் தலைவா் சி.சுந்தரலட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.