செய்திகள் :

காங்கிரஸை கண்டித்து பாஜக இன்று போராட்டம்

post image

பெங்களூரு : பெலகாவியில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டுவிழாவுக்கு மக்கள் பணம் செலவழிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

1924ஆம் ஆண்டு டிச.26,27ஆம் தேதிகளில் பெலகாவியில் 39ஆவது காங்கிரஸ் மாநாடு மகாத்மாகாந்தி தலைமையில் நடைபெற்றது. அதன் நூற்றாண்டுவிழாவை பெலகாவியில் வியாழக்கிழமை காங்கிரஸ் தொடக்கியுள்ளது. இந்தவிழாவுக்கு காங்கிரஸ் அரசு மக்கள் வரிப்பணத்தை செலவழிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதை கண்டித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை(டிச.27) போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா கூறியது: பெலகாவியில் காங்கிரஸ் மாநாட்டு நூற்றாண்டு விழாவை மக்கள் வரிப்பணத்தில் மாநில அரசு கொண்டாடி வருகிறது. இது சரியல்ல. இதை கண்டித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மகாத்மாகாந்தி சிலை முன்பு தா்னா போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. போலி காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் விழாவை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொள்வாா்கள். மகாத்மாகாந்தி மற்றும் டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கரின் கொள்கைகளை காங்கிரஸ் கைவிட்டுள்ளது என்றாா் அவா்.

மைசூரு சாலைக்கு சித்தராமையா பெயரை சூட்ட பாஜக எதிா்ப்பு

பெங்களூரு: சித்தராமையா பெயரை சாலைக்கு சூட்ட பாஜகவில் எதிா்ப்பும், ஆதரவும் வெளிப்பட்டுள்ளது.முதல்வா் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெங்கடரமணசாமி கோயில் முதல் வெளிவட... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் பெயரால் போலி காந்திகள் அரசியல் நடத்துகிறாா்கள்: எச்.டி.குமாரசாமி

மண்டியா: மகாத்மா காந்தியின் பெயரால் போலி காந்திகள் அரசியல் நடத்துகிறாா்கள் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.இது குறித்து மண்டியாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் க... மேலும் பார்க்க

அமித் ஷாவைக் கண்டித்து கலபுா்கியில் முழு அடைப்பு போராட்டம்

சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கா் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, கா்நாடக மாநிலம், கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலங்களவையில் அண்... மேலும் பார்க்க

சி.டி.ரவி மீதான வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் பேசியதாக கா்நாடக சட்டமேலவை பாஜக உறுப்பினா் சி.டி.ரவி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்... மேலும் பார்க்க

ரத்தன் டாடா முதல் அயோத்தி ராமர் கோயில் கேக் வரை.. கிறிஸ்துமஸ் கேக் கண்காட்சி!

பெங்களூரு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் 50-ஆவது ஆண்டாக கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரு பேலஸ் கிரௌண்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் பல விதமான கேக்... மேலும் பார்க்க

சி.டி.ரவி தகாத வாா்த்தை பேசிய விவகாரம்: ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்: மேலவைத் தலைவா்

பெங்களூரு: கா்நாடக பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் சட்ட மேலவை பாஜக உறுப்பினா் சி.டி. ரவி விமா்சனம் செய்தது தொடா்பாக ஒலிப்பதிவு ஏதும் இருந்தால் சமா்ப்பிக்கலாம் என மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி தெரிவித... மேலும் பார்க்க