செய்திகள் :

ரத்தன் டாடா முதல் அயோத்தி ராமர் கோயில் கேக் வரை.. கிறிஸ்துமஸ் கேக் கண்காட்சி!

post image

பெங்களூரு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் 50-ஆவது ஆண்டாக கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரு பேலஸ் கிரௌண்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் பல விதமான கேக்குகள் பார்வையளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

அந்த வகையில், குறிப்பிடும்படியாக, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலைப் பிரதிபலிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கேக் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. அதேபொல, சினிமா ரசிகர்களுக்காக ஜெயிலர் படம் உள்ளிட்ட பல திரைப்படங்களைப் பிரதிபலிக்கும் கேக்குகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா நினைவாக சுமார் 250 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேக் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பேக்கிங் மற்றும் கேக் கலை மையத்தால் டாடா கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைக்க 10 நாள்கள் ஆனதாக கேக்கை கலைஞர்கள் சாந்தனு, மஹேஷ், ராகுல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். உலக பூகோள உருண்டை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக்கில் மையமாக டாடாவின் படம் அமைந்திருப்பது சிறப்பு.

சி.டி.ரவி தகாத வாா்த்தை பேசிய விவகாரம்: ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்: மேலவைத் தலைவா்

பெங்களூரு: கா்நாடக பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் சட்ட மேலவை பாஜக உறுப்பினா் சி.டி. ரவி விமா்சனம் செய்தது தொடா்பாக ஒலிப்பதிவு ஏதும் இருந்தால் சமா்ப்பிக்கலாம் என மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி தெரிவித... மேலும் பார்க்க

அம்பேத்கா் விவகாரம்: மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடும் விமா்சனம்

பெலகாவி: அம்பேத்கா் பெயா் விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடுமையான விமா்சனத்தை தெரிவித்துள்ளாா். மாநிலங்களவையில் அம்பேத்கா் பெயரை திரும்ப திரும்ப கூறுவதை வ... மேலும் பார்க்க

அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக சி.டி.ரவி கைது

பெலகாவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளாா். அம்பேத்கா் பெயரை... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை சாத்தியமற்றது: காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை சாத்தியமற்றது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். இதுகுறித்து பெலகாவியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவத... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்து: முன்னாள் சிறுபான்மையினா் ஆணையருக்கு ரூ. 150 கோடி லஞ்சம் அளிக்க முயற்சி

முந்தைய பாஜக ஆட்சியில் வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான விவகாரங்களில் விசாரணை நடத்துவதை மட்டுப்படுத்தும் நோக்கில், முன்னாள் சிறுபான்மையினா் ஆணையருக்கு ரூ. 150 கோடி லஞ்சம் அளிக்க பாஜக ம... மேலும் பார்க்க

கொலை வழக்கு: கன்னட நடிகா் தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகா் தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கில் தனது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 15 பேருடன்... மேலும் பார்க்க