எம்ஜிஆா் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் அஞ்சலி
எம்ஜிஆரின் 37-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
அவரைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா். அதேபோல, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன், துணைப் பொதுச்செயலா் ஜி.செந்தமிழன் ஆகியோரும் எம்ஜிஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.