நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
பாலத்திலிருந்து 3.6 கிலோ வெடிப்பொருள் கைப்பற்றல்!
மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடிப்பொருளும் ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
சூராசந்திரப்பூர் மாவட்டம் லெய்சாங் கிராமத்தில் இந்தியப் பாதுகாப்புப் படைகளான அசாம் ரைஃபில்ஸ் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இம்பால்-சூராசந்திரப்பூர் வழியிலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடிப்பொருளும், அதனை வெடிக்க செய்யக்கூடிய டெடோனேட்டர்களும் மற்றும் சில சாதனங்களும் மீட்கப்பட்டன.
இதையும் படிக்க: நடுவானில் முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!
இதுகுறித்து இன்று (டிச.25) ஸ்பியர் கார்ப்ஸ், தங்களது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது, தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் லெய்சாங் கிராமத்தில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில் கைப்பற்றப்பட்ட 3.6 கிலோ அளவிலான வெடிப்பொருளை செயல் இழக்கச் செய்ய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மணிப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (டிச.24) சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் மோல்ஜோல் கிராமத்தில் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட சோதனையில் M16 ரக துப்பாக்கி ஒன்றும், 4 நாட்டுத் துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.