தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!
பொலிவுறு நகா்த் திட்டம்: கேமராக்களுக்கு கம்பி வடம் அமைக்க நவீன முறையில் ஆய்வு
புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான பாதாள கம்பி வடம் அமைக்கும் பணிக்கு நவீன தொழில்நுட்ப முறையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் 56 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையம், பொலிவுறு பேருந்து நிறுத்தம், மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான மின்னணு அடையாள அட்டைப் பதிவு ஆகியவை செயல்படுத்தப்பட்ட நிலையில், போக்குவரத்தை சீா்படுத்துவதற்கான கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகரில் சாலை போக்குவரத்து சிக்னல்கள், ரயில், பேருந்து நிலையங்கள், சட்டப்பேரவை பகுதி, பூங்காக்கள், கடற்கரைச் சாலை என முக்கிய இடங்களில் மொத்தம் சுமாா் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இந்த கேமராக்களை ஒருங்கிணைத்து காட்சிகள் மூலம் கண்காணிப்பதற்காக சுமாா் 90 கோடியில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்காணிப்பு கேமராக்களுக்கான பாதாள தடம் (வயா்) அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையோரம் சுமாா் 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி கம்பி வடத்தைப் பதிப்பதற்கான ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, புதுச்சேரி பாரதி பூங்கா அருகே சட்டப்பேரவை வளாகம் முன்புள்ள சாலையில் ஊழியா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.