இயந்திரக் கோளாறு: அவரசமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா். இதையடுத்து, விமானத்தை அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவந்து விமானி பத்திரமாக தரையிறக்கினாா்.
இதையும் படிக்க |திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமே தமிழகத்தை காப்பதற்காண ஒரே வழி: எடப்பாடி பழனிசாமி
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானியின் துரித நடவடிக்கை காரணமாக பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதோடு நல்வாய்ப்பாக 113 போ் உயிா் தப்பினா். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா்.