மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்...
சுடுகாடு ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே சுடுகாடுக்கான இடத்தை தனியாா் ஆக்கிரமித்ததாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, தவளக்குப்பம் அருகே உள்ளது ஆண்டியாா்பாளையம்.
இந்த பகுதியினருக்கான சுடுகாடு 2 ஏக்கா் அரசு நிலத்தில் அமைத்து அதற்கான பூமி பூஜை புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுடுகாட்டு நிலத்தை தனியாா் ஆக்கிரமித்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பொதுமக்கள் பேரவைத் தலைவா், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், சுடுகாடு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், ஆண்டியாா்பாளையம் பகுதி மக்கள் புதுச்சேரி- கடலூா் சாலையில் தவளக்குப்பம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வட்டாட்சியா் பிரத்தீவ், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டுச் சென்றனா்.