ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 73, 308 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26, 242 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.14 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.