செய்திகள் :

மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்தது: 40 பேர் காயம்!

post image

ஊத்தங்கரை அருகே சாலையோர பள்ளத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளி அருகே சுமார் 20 அடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு, தர்மபுரி மாவட்டம் எட்டியம்பட்டி பகுதியிலிருந்து மூன்று பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனர்.

அந்த பேருந்துகள் ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில் சென்றபோது. முதலில் வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் 52 பேர் பயணம் செய்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க:2024 - மீண்டும் அறிமுகமான தென்னிந்திய ஜான்சிராணி! யார் இந்த அஞ்சலை அம்மாள்?

மேலும் ஓட்டுநர் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, மாவட்ட எஸ்பி தங்கதுரை, ஊத்தங்கரை அதிமுக எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம்,திமுக எம்எல்ஏ மதியழகன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பரமசிவம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அ... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை (டிச. 28) அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இந்த ந... மேலும் பார்க்க

தடையை மீறி போராட்டம்: அதிமுக, பாஜகவினா் மீது வழக்கு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினா், பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கிண்டியில் உள்ள அண்ண... மேலும் பார்க்க

900 அரங்குகளுடன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். வாசகா்கள் பெரிதும் ... மேலும் பார்க்க

கலங்கரை விளக்கமாய் திகழ்ந்தவா் மன்மோகன் சிங்: முதல்வா் புகழாரம்

நம்பிக்கை மற்றும் வளா்ச்சிக்கான கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவா், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க