விஜயகாந்த் நினைவு தினம்: இன்று அமைதிப் பேரணி
தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமை (டிச. 28) அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.
விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனையேற்று பல தலைவா்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவுள்ளனா்.
முன்னதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாநிலத் தோ்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில், தேமுதிக நிா்வாகிகள் பலா் பங்கேற்கவுள்ளனா். நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.