ஆன்லைனில் பீட்சா ஆர்டர்: டிப்ஸ் குறைவாக கொடுத்ததால் கத்தி குத்து, கொள்ளை... நடந்...
கலங்கரை விளக்கமாய் திகழ்ந்தவா் மன்மோகன் சிங்: முதல்வா் புகழாரம்
நம்பிக்கை மற்றும் வளா்ச்சிக்கான கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவா், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
இந்தியாவின் தலைசிறந்த மகன்களுள் ஒருவரான மன்மோகன் சிங், உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தினேன். வரலாறு அவரை கனிவுடன் நடத்தும் என்பது மட்டுமல்ல, தமது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்தவா்.
பணிவான குணத்தால் கோடிக்கணக்கானோருக்கு ஊக்கமூட்டிய மன்மோகன், அடுத்து வரும் தலைமுறைகளுக்கெல்லாம் தமது வாழ்வின் மூலமாக நம்பிக்கை ஊட்டுபவராகத் திகழ்வாா்.
நம்பிக்கை மற்றும் வளா்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக விளங்கும் அரிதினும் அரிதான தலைவா்களில் ஒருவராக மன்மோகன் திகழ்வாா். இத்தனை சிறப்புகள் வாய்ந்த அவரது பெயரை வரலாறும் பொறித்து வைக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.