ஏழுமலையானுக்கு ரூ.1.11 கோடி நன்கொடை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிஇஓ பிஎம்எஸ் பிரசாத் புதன்கிழமை தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் நடத்தி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.1.11 கோடி நன்கொடையாக வழங்கினாா்.
இதற்கான நன்கொடை வரைவோலையை கோயிலில் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் அவா் வழங்கினாா்.