செய்திகள் :

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்! - முதல்வர் அறிவிப்பு

post image

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, நல்லகண்ணு பெயரைச் சூட்டிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

இதையும் படிக்க | நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் பங்கேற்பு!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் இரா. நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும்வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு 'தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்'எனப் பெயரிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தென்மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தைப் பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.14) கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்... மேலும் பார்க்க

பொங்கல்: நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

சென்னை: தைப் பொங்கல், காணும் பொங்கல் பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூடும் மக்கள், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, முதியவா்கள், இண... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமனம்: உள் ஒதுக்கீடு குறைப்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமனத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, அமைச்சுப் பணியாளா்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

உழைப்பை, சமத்துவத்தைப் போற்றும் பொங்கல் விழா ஆளுநா் ரவி, முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பொங்கல் விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்ட... மேலும் பார்க்க

ரூ.804 கோடியில் 746 ஊரகச் சாலைகள் அமைக்க அரசாணை

சென்னை: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ.804 கோடியில் ரூ.746 சாலைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட்ட செய்தி... மேலும் பார்க்க

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: முதல்வா் தொடங்கி வைத்தாா்

சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவ... மேலும் பார்க்க