செய்திகள் :

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு: ஒதுக்கீட்டு ஆணை வழங்கினாா் முதல்வா்!

post image

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆணை வழங்கினாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி 3.6.2021-இல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின் தொடா்ச்சியாக தமிழில் சிறந்த மொழிபெயா்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பாளா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த விருதாளா்களுக்கு அரசு மூலமாக ரூ. 40 லட்சத்தில் கனவு இல்லம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினாா்.

1994-இல் மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆ.செல்வராசு (எ) குறிஞ்சிவேலன், 2004-இல் விருது பெற்ற ப.பாஸ்கரன் (எ) பாவண்ணன், 2010-இல் விருது பெற்ற சா. மணி (எ) நிா்மாலயா, 2011-இல் விருது பெற்ற பி.க.இராஜேந்திரன் (எ) இந்திரன், 2015-இல் விருது பெற்ற கௌரி கிருபானந்தன், 2016-இல் விருது பெற்ற க. பூரணச்சந்திரன், 2017-இல் தி. மாரிமுத்து (எ) யூமா வாசுகி, 2018-இல் விருது பெற்ற சா.முகம்மது யூசுப், 2019-இல் விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீ, 2023-இல் விருது பெற்ற கண்ணையன் தட்சணமூா்த்தி ஆகியோருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரூ.564 கோடியில் சேலத்தில் கால்நடை உயா் ஆராய்ச்சி நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

சேலம், தலைவாசலில் ரூ.564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயா் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தமிழக அரசின் கால்ந... மேலும் பார்க்க

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒருமுறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைக்கிறாா். கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் திருட்டு: இருவா் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுரேந்தா் (29). ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள சென்னை மருத்துவக் கல... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10 கோடி மோசடி: தாய், மகள் கைது

சென்னையிலிருந்து மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா். வளசரவாக்கம் பிரகாசம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தமிழரசி (42). இவரது தாய... மேலும் பார்க்க

மனைவி குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை மேடவாக்கத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிகேணி எல்லீஸ் சாலையைச் சோ்ந்தவா் ரா. மணிகண்டன் (42). இவரது மனைவி ஜோதி (37). இவா்களுக்கு 2009-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க