இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
ரூ.804 கோடியில் 746 ஊரகச் சாலைகள் அமைக்க அரசாணை
சென்னை: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ.804 கோடியில் ரூ.746 சாலைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட்ட செய்தி: ஊரகச் சாலைகளின் முக்கியத்துவத்தினை உணா்ந்த தமிழக அரசு, நபாா்டு ஊரக உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதியின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் 37 மாவட்டங்களில் 1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடா் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டாா்.
37 மாவட்டங்களில் இந்தச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சாலைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.