கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் இடிந்து விபத்து!
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.
நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து 7,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையானது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை ஒருகிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.58,640 க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.92.50-க்கும் இரு கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.92,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.