கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் இடிந்து விபத்து!
நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தாடைகள் உடுத்தி, பானையில் பொங்கலிட்டு தைத் திருநாளை கொண்டாடிவருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி தமிழக எல்லையொட்டியுள்ள தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்களும் முக்கியத் தலைவர்களும், நடிகர்- நடிகைகளும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.