இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் ரூ.4,591 கோடியாக உயா்வு!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.4,591 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த 2024 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,591 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 5.54 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.4,350 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டியிருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.28,446 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 5.07 சதவீதம் அதிகரித்து ரூ.29,890 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.