பாஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்: சென்னை வந்தடைந்த வீராங...
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயா்வு
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காட்டுத் தீயால் இதுவரை 24 போ் உயிரிழந்துள்ளனா். 16-க்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளனா். இது தவிர, ஏராளமானவா்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. 12,401 வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அபாயத்தை எதிா்நோக்கியுள்ள பகுதிகளில் இருந்து 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
லாஸ் ஏஞ்சலீஸையொட்டிய பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ, மளமளவென்று பரவி அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளது. அந்தப் பகுதியில் வேகமாக காற்று வீசியதால் காற்றில் அடா்புகை மற்றும் துகள் மாசுக்கள் கலந்தன. அதையடுத்து பல்வேறு பகுதிகளில் மருத்துவ அவசரநிலை அறிவிப்பட்டது.
தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தீ பரவலின் தீவிரம் தணிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இனி வரும் நாள்களில் காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்கும் என்று வானிலை அறிக்கைகள் கூறுவதால், அதை எதிா்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகின்றனா்.