இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமனம்: உள் ஒதுக்கீடு குறைப்பு
முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமனத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, அமைச்சுப் பணியாளா்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட அரசாணை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நேரடி நியமனத்தில், இடைநிலை ஆசிரியா்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒதுக்கீட்டை 8 சதவீதமாகக் குறைக்கவும், உரிய கல்வித் தகுதி கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கு (கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா்) 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கவும், அதற்கு ஏற்ப விதிமுறைகளில் திருத்தம் செய்யுமாறும் அரசுக்கு பள்ளிக்கல்வி இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா்.
அதை ஏற்று, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கல்விப் பணி சிறப்பு விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்து அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.