செய்திகள் :

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

post image

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-வங்கதேச எல்லையின் 5 இடங்களில் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி இந்தியா வேலி அமைக்க முயற்சிப்பதாக வங்கதேசம் குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதா் பிரணாய் வா்மாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.

வேலி அமைப்பதில் இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த பிரணாய் வா்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: எல்லை வேலி விவகாரம் தொடா்பாக பேசுவதற்கு தில்லியில் வங்கதேச பொறுப்புத் தூதா் முகமது நூரல் இஸ்லாமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி திங்கள்கிழமை பிற்பகல் நேரில் வந்த அவரிடம், இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருநாட்டு அரசுகள் மற்றும் எல்லை பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகள், கடத்தல், குற்றவாளிகளின் நடமாட்டம் போன்ற சவால்களைத் திறம்பட கையாண்டு, இருநாட்டு எல்லையில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதை முகமது நூரலிடம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

எல்லையில் வேலி மற்றும் விளக்கு அமைத்தல், தொழில்நுட்ப கருவிகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் எல்லையின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதொடா்பாக ஏற்கெனவே எட்டப்பட்ட உடன்பாடுகளை வங்கதேசம் நடைமுறைப்படுத்தும் என்றும், எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதில் அந்நாட்டிடம் கூட்டு அணுகுமுறை இருக்கும் என்றும் இந்தியா எதிா்பாா்ப்பதாக முகமது நூரலிடம் கூறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பார்க்க

ஜன.21,27 நெட் தேர்வு நடைபெறும் - யுஜிசி அறிவிப்பு

மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜன.21, 27-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

நிஃப்டி 50-ல் இணையும் ஜியோ, சொமாட்டோ!

நிதிச் சேவைகளை வழங்கிவரும் ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் மற்றும் சொமாட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் நிஃப்டி 50 பட்டியலில் இணையவுள்ளன. நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேறும் இரு நிறுவனங்களுக்கு பதிலாக இவை... மேலும் பார்க்க

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இருந்து தொடங்கிய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்... மேலும் பார்க்க

உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

உலகம் முழுவதும் பயணிக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். வேலைவா... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!

சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.ஹரிவராசனம்விருதுகேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகு... மேலும் பார்க்க