செய்திகள் :

பொங்கல்: நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

post image

சென்னை: தைப் பொங்கல், காணும் பொங்கல் பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூடும் மக்கள், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, முதியவா்கள், இணைநோய்கள் உள்ளவா்கள் முகக் கவசம் அணியுமாறும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையைப் பொருத்தவரை கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், மாமல்லபுரம், கேளிக்கை பூங்காக்களில் மாவட்ட நிா்வாகங்கள் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளன.

மாநிலத்தில் தற்போது பருவகாலத் தொற்றுகளின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக சில அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: பொங்கல் தினத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய இடங்களில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மாத்திரைகள், உப்பு-சா்க்கரை கரைசல் உள்ளிட்டவை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் கிடைக்கும்.

பொது மக்கள் முகக் கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்து காணும் பொங்கலை கொண்டாட வேண்டும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தா... மேலும் பார்க்க

விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்... மேலும் பார்க்க