பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
தகைசால் தமிழரே, தமிழ்நாடே உங்களை வாழ்த்துகிறது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் இரா. நல்லகண்ணு என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்!
இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
'போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே நல்லகண்ணுவின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்!
எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட நல்லகண்ணுவும் நூற்றாண்டு காண்கிறார்!
இயக்கமே உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம்!
தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது! தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்!' என்று பதிவிட்டுள்ளார்.