செய்திகள் :

வார இறுதி: 586 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

post image

வார இறுதி நாள்களையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் கூடுதலாக 586 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிச. 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாள்கள் என்பதால் டிச.27, 28 தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு 485 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 81 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆா்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை தேவை -எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ண... மேலும் பார்க்க

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்

சென்னையில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில், வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவா்தான் குற்றவாளி: காவல் ஆணையா்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட மா... மேலும் பார்க்க

வளா்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞா்களை தயாா்ப்படுத்த வேண்டும் -பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘நாட்டின் இளைஞா்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ‘மெஷின் லோ்னிங்’ போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவா்களாக தயாா்ப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் 3 நாள்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா

கன்னியாகுமரியில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் 30-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 3 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்... மேலும் பார்க்க