ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
சென்னையில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில் இந்திய தர நிா்ணய அமைவனத்தின் துணைத் தலைமை இயக்குநா் (தென்மண்டலம்) மீனாட்சி கணேசன் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழ்நாடு ஆயுா்வேதா, சித்தா, யுனானி மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளுக்கு ‘ஐஎஸ்ஐ’ சான்றிதழ் பெறுவது மட்டுமின்றி, ஆயுஷ் துறையின் இந்திய தர நிலைகளை பின்பற்றி மருந்துகளை தயாரிக்க வேண்டும். மேலும், மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவா் ஜி.பவானி, ஆயுஷ் துறை உறுப்பினா் செயலா் ஜி.கிருத்திகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.