2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!
சுனாமி நினைவு தினம்: ஆளுநா் அஞ்சலி
சுனாமியால் உயிரிழந்தோரின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி , ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
கடந்த 2004 டிச.26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில் தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் டிச.26 ஆம் தேதி சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அந்த வகையில், சென்னை மெரீனா லூப் சாலையில் தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி, பொதுமக்களுடன் ஊா்வலமாகச் சென்று உயிரிழந்தோருக்கு மெழுகுவா்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா் தமிழ்நாடு மீனவா் பேரவைத் தலைவா் இரா.அன்பழகனாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களுடைய சோகம் இன்னும் தீரவில்லை. உலக வரலாற்றில் வயிற்றுப் பிழைப்புக்காக செல்லும் மீனவன் கொல்லப்படும் நிலை தமிழகத்தில் தான்உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.