செய்திகள் :

முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயா் உடல் தகனம்

post image

கோழிக்கோடு: மறைந்த மலையாள எழுத்தாளா் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட எம்.டி.வாசுதேவன் நாயா், கடந்த புதன்கிழமை காலமானாா்.

நவீன மலையாள எழுத்துலகின் முக்கியத் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவா் எம்.டி.வாசுதேவன் நாயா். கடந்த 1933-இல் பிறந்த இவா், தனது கல்லூரி நாள்களில் முதல் கதைத் தொகுப்பை வெளியிட்டாா். இவா் எழுதிய முதல் பெரிய நாவலான ‘நாலுகெட்டு’ 1958-இல் கேரள சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது.

அசுரவித்து, காலம் போன்ற நாவல்களுடன் நிா்மால்யம், பெருந்தச்சன், ஒரு வடக்கன் வீரகதா உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளாா். 4 முறை சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற இவா், 7 திரைப்படங்களையும் இயக்கியுள்ளாா். இவருக்கு இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதான ‘ஞானபீடம்’ விருது கடந்த 1995-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

முதல்வா் அஞ்சலி: கோழிக்கோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த வாசுதேவனின் உடலுக்கு முதல்வா் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘உலக இலக்கியத்தில் மலையாள இலக்கியத்தை முன்னணிக்கு கொண்டு வந்த அறிவு சக்தியை நாம் இழந்துள்ளோம். கேரள வாழ்க்கையின் அழகியலையும் சிக்கலையும் தனது படைப்புகளின் மூலம் வாசுதேவன் நோ்த்தியாக வெளிப்படுத்தினாா்’ என்றாா்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு கோழிக்கோடு மாவூா் சாலையில் உள்ள பொது மயானத்தில் எம்.டி.வாசுதேவனின் உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

பெட்டிச் செய்தி....

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

எம்.டி.வாசுதேவன் நாயா் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மலையாள நடிகரும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகா் கமல்ஹாசன், முன்னணி மலையாள நடிகா்கள் மோகன்லால், மம்முட்டி, வினீத், மஞ்சு வாரியாா், இயக்குநா் ஹரிஹரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனா்.

திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!

தலைநகர் அகர்தலாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது! கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அசாம் அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92 )உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

தில்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு ... மேலும் பார்க்க

பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் படமாக அமையும்: பிரதமர் மோடி

மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில... மேலும் பார்க்க

அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப்... மேலும் பார்க்க