ARR: 'அன்று போதையிலிருந்த கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை...' - ரஹ்மான் சொல்லும் வாழ...
மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் படமாக அமையும்: பிரதமர் மோடி
மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடியின் விடியோ செய்தியில்,
மன்மோகன் சிங்கின் மறைவு தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு எப்போதும் இருக்கும்.
அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு எப்போதும் ஒரு பாடமாக அமையும். வறுமையைத் தாண்டி வெற்றியின் உச்சத்தை அடைந்தவர். அவர் ஒழுக்கமான மனிதர், அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலைவர் என்று எப்போதும் நினைவுகூரப்படுவார்.
பல்வேறு பதவிகளில் பணியாற்றியதைக் குறிப்பிட்ட பிரதமர், சவாலான காலங்களில் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர், பிவி நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக நாட்டை புதிய பொருளாதாரப் பாதையில் கொண்டு சென்றவர் என அவர் கூறினார்.