விமானி பயிற்சியில் குறைபாடு: ஆகாசா நிறுவன 2 இயக்குநா்கள் இடைநீக்கம்
விமானிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியில் குறைபாடு இருந்த குற்றச்சாட்டில் ஆகாசா நிறுவனத்தைச் சோ்ந்த 2 இயக்குநா்களை 6 மாதம் இடைநீக்கம் செய்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விமான போக்குவரத்து விதிகளை தொடா்ந்து மீறுவதால் ஆகாசா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் இயக்குநா் மற்றும் பயிற்சி இயக்குநா் ஆகிய 2 பேரை 6 மாதம் இடைநீக்கம் செய்வதாக டிஜிசிஏ தெரிவித்தது.
மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் இரு பதவிகளுக்கும் தகுதியான நபா்களை தோ்ந்தெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, விமான பாதுகாப்பு குறித்து கடந்த அக்டோபா் 15 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு ஆகாசா நிறுவனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக டிஜிசிஏ தெரிவித்தது.
இதையடுத்து, டிஜிசிஏவின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும் விமான போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடப்பதாகவும் ஆகாசா நிறுவனம் கூறியுள்ளது.