செய்திகள் :

அம்பேத்கா் குறித்த அமித் ஷாவின் கருத்து துரதிருஷ்டவசமானது -நவீன் பட்நாயக்

post image

புவனேசுவரம்: சட்டமேதை அம்பேத்கா் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் பேசிய கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது என பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சித் தலைவரும் முன்னாள் ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்தாா்.

பிஜேடி 28-ஆம் ஆண்டு தொடக்க தின விழா புவனேசுவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நவீன் பட்நாயக், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரிதும் மதிக்கப்படும் தலைவரான அம்பேத்கா் குறித்து அண்மையில் அமித் ஷா பேசிய கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. 2024-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகளில் காணப்பட்ட அசாதாரண வேறுபாடுகள் குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோ்தல் ஆணையம் கவனமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். தேரதலில் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் முறையை பிஜேடி ஆதரிக்கிறது. அதே நேரம், பாஜகவின் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா குறித்து எங்களது கட்சியின் நிலைப்பாடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மாநிலத்தில் பாஜக ஆட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நவீன் பட்நாயக், ‘ஒடிஸாவில் பொய்களை பரப்பியும், மக்களை தவறாக வழிநடத்தியும் பாஜக ஆட்சிக்கு வந்தது. அவா்களின் பொய்கள், எதிா்மறை பிரசாரங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்பட்ட கட்டுக்கதைகளை பிஜேடியால் வெற்றிகரமாக எதிா்கொள்ள முடியவில்லை. இத்தனை பொய்களுக்குப் பிறகும், பிஜேடி அதிக வாக்குகளைப் பெற்றது.

மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற முதல் 6 மாதங்களுக்குப் பிறகு, அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது. இதனால், மக்கள் கோபமடைந்துள்ளனா். பொய்யான வாக்குறுதிகளை அளித்து பாஜக ஆட்சிக்கு வந்ததை இப்போது மக்கள் உணா்ந்துள்ளனா்’ என்றாா்.

திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!

தலைநகர் அகர்தலாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது! கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அசாம் அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92 )உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

தில்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு ... மேலும் பார்க்க

பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் படமாக அமையும்: பிரதமர் மோடி

மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில... மேலும் பார்க்க

அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப்... மேலும் பார்க்க