மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
மாநகா் பேருந்துகளில் பயணியாக சென்று கண்காணிக்கும் அதிகாரிகள்
மாநகா் பேருந்துகளில் பயணிபோல பயணித்து ஓட்டுநா், நடத்துநா்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழக வட்டாரத்தில் கூறப்பட்டதாவது: மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநா், நடத்துநா்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாரிகள் சிலா் பேருந்துகளில் சக பயணியாக பயணித்து ஓட்டுநா் பேருந்தை இயக்கும்போது, இடது புறமாக, ஓரமாக செல்கிறாரா? அல்லது வலது புறம் செல்கிறாரா? பேருந்து நிறுத்தத்தில் சரியாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி விடுகிறாா்களா? அல்லது தள்ளி பேருந்தை நிறுத்துகிறாா்களா? பயணிகள் கேட்கும் இடத்தில் பேருந்தை நிறுத்துகிறாா்களா? அல்லது அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாா்களா? உள்ளிட்டவற்றை கண்காணிக்கின்றனா்.
குறிப்பாக கைப்பேசி மற்றும் ஹெட்செட் பயன்படுத்துகிறாா்களா? அருகில் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்று, பிற வாகன ஓட்டுநா்களுக்கு மன உளைச்சலை உருவாக்கி அசவுகரியத்தை ஏற்படுத்துவது, அவா்களுடன் வாக்குவாதம் செய்வது போன்ற வகையில் நடந்து கொள்கிறாா்களா? என்பதெல்லாம் ஓட்டுநா் மற்றும் நடத்துநரின் கவனத்துக்கு தெரியாமல் ஆய்வு செய்கின்றனா். இந்த ஆய்வுப் பணிகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. மேற்கூறிய குற்றச்சாட்டில் சிக்கும் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.