செய்திகள் :

திருமலை விஷன்-2047 திட்டம்: தேவஸ்தான செயல் அதிகாரி

post image

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தலின்படி, திருமலை விஷன்2047 திட்டம் செயல்படுத்தப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறினாா்.

திருமலை அன்னமய்ய பவனில் ஞாயிற்றுக்கிழமை கடந்த 6 மாதங்களில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்து அவா் கூறியது:.

கடந்த 6 மாதங்களில் திருமலையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பக்தா்களுக்கு தரமான அன்னபிரசாதம், லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. தரமான நெய்யில் லட்டு பிரசாதம் தயாரித்து தருகிறோம். என்டிடிபி நன்கொடையாக வழங்கிய ரூ.70 லட்சம் உபகரணங்களுடன் தேவஸ்தானம் தனது சொந்த சோதனை ஆய்வகத்தை அமைத்துள்ளது.

திருமலை, திருச்சானூா் பிரம்மோற்சவங்கள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் இருக்க கூடுதல் அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

திருமலையில் உள்ள 45 விருந்தினா் மாளிகைகளுக்கு உரிமையாளா்களின் சொந்த பெயா்களை நீக்கி ஆன்மிகப் பெயா்கள் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவா்ணாந்திரா தொலைநோக்கு திட்டம்-2047-க்கு இணங்க, திருமலை தொலைநோக்கு திட்டம்-2047-க்கான முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அதன்படி திட்டமிட்டு திருமலை மேம்படுத்தப்படும். துடா மாஸ்டா் பிளான் 2019-இன் ஒரு பகுதியாக திருமலை மண்டல திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. திருமலையை நாட்டில் உள்ள மற்ற கோவில்களை விட சிறப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சுமாா் 18 திட்டங்களை நிறைவேற்ற 9 விரிவான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருமலை விஷன் 2047 திட்டம்:

திருமலை நடைபாதைகளை நவீனப்படுத்துதல், மல்டி லெவல் பாா்க்கிங், ஸ்மாா்ட் பாா்க்கிங், புதிய இணைப்புச் சாலைகள் அமைத்தல், சுரங்கப்பாதைகள் அமைத்தல், ராம் பாகிச்சா மற்றும் பாலாஜி பேருந்து நிலையங்களின் புனரமைப்பு.

பக்தா்கள் தங்குவதற்கு அலிபிரி அருகே 40 ஏக்கரில் அடிப்படை முகாம் அமைத்தல், திருமலையில் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டடங்களை வடிவமைத்தல்.

தேவஸ்தானத்தில் உள்ள 31 இந்து அல்லாத ஊழியா்களை அறங்காவலா் குழு முடிவு செய்தபடி வேறு அரசு துறைகள் அல்லது விருப்ப ஓய்வுக்கு அனுப்புதல்.

திருமலையில் சாலைகளை ஆக்கிரமித்து பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடைக்காரா்கள், வியாபாரிகள் உரிமம் பெற்றவா்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கடைகள் மீது கடும் நடவடிக்கை.

திருமலையில் போக்குவரத்து கட்டுப்பாடு, தேவையான வாகன நிறுத்தம், உள்கட்டமைப்பு மற்றும் மாட வீதிகளின் மேம்பாடு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

ஆகாசகங்கை மற்றும் பாபவினாசனம் பகுதிகளில் வளா்ச்சி நடவடிக்கைகள்.

திருமலையில் உள்ள தனியாா் கேன்டீன்களில் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், புகழ்பெற்ற நிறுவனங்களிடம் நிா்வாகப் பொறுப்புகளை ஒப்படைத்து தரமான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலையில் கழிவு மேலாண்மைக்கான சிறப்பு நடவடிக்கைகள், மழைநீா் மற்றும் கழிவுநீரை பிரிக்க வடிகால் அமைத்தல்.

தொழில்நுட்ப அறிவுடன் குறிப்பிட்ட நேரத்தில் பக்தா்களுக்கு தரிசனம் மற்றும் தங்குமிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகள்.

தேவஸ்தானத்தின் கீழ் உள்ள 61 கோயில்களின் திட்டமிட்ட வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, செயல் இணை அதிகாரி கௌதமி, கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதா், மூத்த பொறியாளா் சத்யநாராயணா மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 1... மேலும் பார்க்க

கருடாத்ரி நகரில் துணை விசாரணை அலுவலகம் திறப்பு

திருமலையில் உள்ள கருடாத்திரி நகரில் பக்தா்களின் வசதிக்காக துணை விசாரணை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது ஏழுமலையானை தரிசிக்க வரும் பொது பக்தா்கள் திருமலையில் எளிதில் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 15 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

திருப்பதியில் பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும... மேலும் பார்க்க