செய்திகள் :

கழுகார்: ஓ.பி.எஸ் வைத்த வேண்டுதல் டு நயினார் போட்ட போஸ்ட்! பரபர அப்டேட்ஸ்

post image

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, வெளியே தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார் ஓ.பி.எஸ். இந்த நிலையில், ‘இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், மீண்டும் ஆக்டிவ் மோடுக்கு வந்தவர், கோயில் கோயிலாக ஏறி பூஜைகள் செய்துவருகிறார்.

ஓ.பி.எஸ்.

கடந்த வாரத்தில் மட்டும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், உவரி சுயம்புலிங்கம் கோயில், கூடங்குளம் அருகே விஜயாபதியிலுள்ள விஸ்வாமித்திரர் கோயில் என ஏகப்பட்ட கோயில்களுக்குச் சென்று வழிபட்டுவருகிறார் ஓ.பி.எஸ். எல்லாக் கோயில்களிலும் ‘தீர்ப்பு, தனக்குச் சாதகமாக வர வேண்டும்’ என வேண்டுதல் வைத்திருப்பதோடு, தன்னுடைய தொண்டர்களிடமும், “தீர்ப்பு நமக்குச் சாதகமாக வர வேண்டும் என உங்களுக்கு விருப்பமான தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டு பூஜை செய்யுங்கள்” என உத்தரவிட்டிருக்கிறாராம். “செய்யவேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்தால்தானே தெய்வமும் கைகொடுக்கும்... சும்மா பூஜை பண்ணிக்கிட்டே இருந்தா, அரசியல்ல ஜெயிக்க முடியுமா?” எனப் புலம்புகிறார்கள் அ.தி.மு.க தொ.உ.மீ.கு உறுப்பினர்கள்!

பா.ஜ.க சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, மாற்றுக் கட்சிகளின் மீதான பாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது” என்று முணுமுணுக்கிறார்கள் கமலாலய சீனியர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளன்று, அவரை வணங்குவதுபோலச் சமூக வலைதளத்தில் போட்டோவைப் பகிர்ந்தவர், தற்போது எம்.ஜி.ஆர் நினைவுநாள் அன்றும் அதேபோல ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால், ‘அந்தப் புகைப்படத்தில் அவரது கட்சி சார்ந்து எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பதுதான்’ கமலாலயத்தின் இப்போதைய ஹாட் டாப்பிக்.

ஏற்கெனவே, “கட்சி மாறும் எண்ணத்தில் இருக்கிறார் நயினார் எனக் கண்டபடி தகவல்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இப்படி நம் கட்சி அடையாளம் இல்லாமல், மாற்றுக் கட்சித் தலைவர்கள் குறித்துப் பகிர்ந்தால், அந்தத் தகவல்களெல்லாம் உண்மை என்று ஆகிவிடாதா... ஏன் தேவையில்லாத சலசலப்புக்கு இடம் கொடுக்கிறார்?” என முணுமுணுக்கிறார்கள் கமலாலயத்தில். “மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், முக்கியமான தலைவர்கள் என்கிற அடிப்படையில்தான் ஐயா வாழ்த்துச் சொல்கிறார். இதையெல்லாம் பெரிதுபடுத்தினால் எப்படி?” எனச் சமாளிக்கிறார்கள் நயினாருக்கு நெருக்கமானவர்கள்!

மேற்கேயுள்ள முக்கிய மாவட்டத்தில், இலைக் கட்சியின் மா.செ-வாக இருக்கிறார் ‘தாய்க்கடவுள்’ பெயர்கொண்டவர். இவர், அதே மாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் மா.செ-வுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பனிப்போரில் ஈடுபட்டுவருகிறாராம். ‘போஸ்டரில் இனிஷியலார் பெயரைப் போடாதே, படத்தைப் பெரிதாகப் போடாதே…’ என்று தொண்டர்களுக்கும் தொடர்ச்சியாகக் குடைச்சல் கொடுக்கிறாராம். இதனால் கடுப்பான கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும், அண்மையில் மாஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, தாய்க்கடவுள் பெயர்கொண்டவருக்கு எதிராகக் கொதித்துவிட்டார்களாம்.

ஏற்கெனவே தாய்க்கடவுளார் மீது கோபத்திலிருந்த முன்னாள் ‘பெல்’ மாஜியும், “மாவட்டத்தில் நாளுக்கு நாள் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது. கட்சியை வளர்க்கப் பாடுபடாமல், இப்படி உள்ளடி அரசியல் செய்துகொண்டிருந்தால் இனியும் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்’ எனத் தாய்க்கடவுளாரைத் தாளித்துவிட்டாராம்!

டெல்டா மாநகராட்சியில், பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ரியல் எஸ்டேட் ஆசாமிகள் சிலர் லே-அவுட் போட்டு காசு பார்த்துவிட்டார்களாம். இந்த முறைகேடுகளுக்குப் புன்னகை செய்த மாநகரத்தின் ஹெட் புள்ளியும், ஒரு ‘பெரிய ஸ்வீட் பாக்ஸ்’ மதிப்புகொண்ட நிலத்தைத் தன் துணையின் பெயருக்குப் பத்திரம் எழுதிக்கொண்டாராம். இந்த விவகாரத்தைத் தோண்டியெடுத்த இலைக் கட்சித் தரப்பு, அனைத்து ஆதாரங்களையும் கட்சித் தலைமைக்கு அனுப்பிவைத்து, போராட்டம் நடத்துவதற்குத் தேதி கேட்டுக் காத்திருக்கிறார்களாம். இதனால், படபடப்புக்குள்ளான மாநகர `ஹெட்’ புள்ளி, இப்போது எதிர்க்கட்சி நபர்களைச் சரிக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறாராம்!

ஆளும் தரப்புமீது, அண்மைக்காலமாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார் கூர்மையான பெயர்கொண்ட கூட்டணித் தலைவர். ‘தொகுதி முதல் சட்டமன்றம் வரை மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைக்கும் அனுசரணையும் `கவனிப்பும்’ தனக்குக் கொஞ்சமும் கிடைப்பதில்லை. தான் முன்வைக்கும் எந்தக் கோரிக்கைகளையும் ‘மாண்புமிகு’க்கள் புறக்கணித்துவிடுகிறார்கள் என அடுக்கடுக்காக எழுந்த ஆதங்கம்தான், தற்போதைய அவரின் வெடிப்புக்குக் காரணம்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தன்னை எப்படியும் ஆளும் தரப்பு அழைத்து ஆசுவாசப்படுத்தும் என இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறாராம். “அப்படி நடக்கவில்லையென்றால், இந்த இடைத்தேர்தலிலேயே எதிர்முகாமுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் முடிவிலும் இருக்கிறார்” என்கிறார்கள் விவரப்புள்ளிகள்!

Manmohan Singh : 'அவர் குறைவாகப் பேசினார், மிகுதியாக சாதித்தார்' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் நினைவு கூர்ந்த மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: `மறைந்தார் மன்மோகன் சிங்' - பிரதமர் மோடி இரங்கல் | Live

பிரதமர் மோடி இரங்கல்Dr. Manmohan Singh Ji and I interacted regularly when he was PM and I was the CM of Gujarat. We would have extensive deliberations on various subjects relating to governance. His w... மேலும் பார்க்க

Manmohan Singh: `சுய நினைவை இழந்த மன்மோகன் சிங்; இறப்புக்கு காரணம் என்ன?' - மருத்துவமனை அறிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். டெல்லி எய்ம்ஸில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்... மேலும் பார்க்க

'இனி வெறுங்கால் தான்' ; புதிதாக வாங்கப்பட்ட கோயில் சாட்டை - அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு துயரமான நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். சில நேரத்தில் நாம் எதற்காக அரசியலில் இ... மேலும் பார்க்க