செய்திகள் :

Manmohan Singh : 'அவர் குறைவாகப் பேசினார், மிகுதியாக சாதித்தார்' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

post image
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வரான ஸ்டாலின் மன்மோகன் சிங்குடனான தனது நினைவலைகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
Manmohan Singh

அவர் கூறியிருப்பதாவது, 'முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார்.

நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.

பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

Manmohan Singh

தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்.' எனக் கூறியிருக்கிறார்.

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப... மேலும் பார்க்க

'அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் துரதிஷ்டவசமானது...' - அமைச்சர் கோவி.செழியன் சொல்வதென்ன?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

Rewind 2024: நாடாளுமன்றம் முதல் சட்டமன்றங்கள் வரை... இந்த ஆண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் என்னென்ன?

மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியா, இந்த (2024) ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரை பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது.இதில், பெரிதும் கவனம் பெற்ற தேர்தல்களென நாடாளுமன்றத் தேர்த... மேலும் பார்க்க

"அப்பாவிகளைக் கொன்று குவிப்பதுதான் பலமென்றால்..." - மன்மோகன் சிங்கும், பத்திரிகையாளர் சந்திப்புகளும்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சர், பிரதமர் (2004 - 2014) என இந்தியாவின் வளர்ச்சியில், ... மேலும் பார்க்க

Annamalai: 'தமிழ் மரபில் இருக்கிறது' - தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதுதொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``திமுக ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் விவகாரம்: `எல்லோரும் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்' - அன்புமணி ராமதாஸ்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ள நிலையி... மேலும் பார்க்க