தகாத உறவால் பெண் கழுத்தறுத்துக் கொலை: தொழிலாளி தற்கொலை முயற்சி
"அப்பாவிகளைக் கொன்று குவிப்பதுதான் பலமென்றால்..." - மன்மோகன் சிங்கும், பத்திரிகையாளர் சந்திப்புகளும்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சர், பிரதமர் (2004 - 2014) என இந்தியாவின் வளர்ச்சியில், பொருளாதாரத்தில் என்றும் நிலைத்து நிற்பவர் மன்மோகன் சிங். மூன்று தசாப்தங்களாக (33) நாடாளுமன்றத்தில் பங்கெடுத்தவர். இந்திய வரலாற்றில், பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பெயர்போன பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.
பத்திரிகையாளர்களைச் சுதந்திரமாகக் கேள்விகேட்க, ஒரு பிரதமராக அவர் அனுமதித்ததைப் போல கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் இன்னும் நடைபெறவில்லை என்று இன்றும் பலர் கூறுவதுண்டு. அவ்வாறு, பத்திரிகையாளர் சந்திப்புகளில் பிரதமராக மன்மோகன் சிங் அளித்த பதில்களின் சிறிய தொகுப்பு இங்கே...
``இன்னும் அதிகமாகச் செய்திருக்க முடியும் என்பதை ஒப்புக் கொள்ளும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். எப்போதும் நாம் சாதித்ததில் திருப்தி அடையக்கூடாது. முன்னேற்றத்துக்கான இடைவெளி எப்போதும் உண்டு. ஆனால், எங்களின் முதல் வருட செயல்கள் நியாயமான சாதனை என்று நான் நம்புகிறேன்."
``காலம் அனைத்தையும் குணப்படுத்தும் என்று அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால், இந்த பணமதிப்பிழப்பு விவகாரத்தில், அதனால் ஏற்பட்ட காயங்கள் காலப்போக்கில் இன்னும் அதிகமாகத் தெரியும்." - 2018
``மனித வரலாற்றில் எந்தவொரு காலகட்டத்தையும் விட, சிந்தனை மற்றும் செயல்பாட்டின் ஒற்றுமை இன்று மிகவும் அவசியம்." - 2019
``நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. அதை வரலாற்றாசிரியர்கள் தீர்மானிக்க வேண்டும். பா.ஜ.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமானால் அவர்கள் விரும்பியதைச் சொல்லலாம். மேலும், அகமதாபாத்தின் தெருக்களில் அப்பாவி குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்குத் தலைமை தாங்குவதுதான் வலிமை என்றால், அந்த வலிமை தேவை என்று நான் நம்பவில்லை."
``எந்த நேரத்திலும் நான் ராஜினாமா செய்ய நினைத்ததில்லை. என் வேலையை மகிழ்வுடன் செய்தேன். பாரபட்சமின்றி, அச்சமின்றி, நேர்மையுடன் எனது பணியைச் செய்ய முயற்சித்தேன்." - 2014
``சமகால ஊடகங்களை விடவும் அல்லது நாடாளுமன்றத்திலுள்ள உள்ள எதிர்க்கட்சிகளை விடவும் வரலாறு என்னிடம் அன்பாக இருக்கும் என்று நான் நேர்மையாக நம்புகிறேன்."
அமெரிக்க உள்ளிட்ட எந்த நாடுகளுக்கு பிரதமராக இருக்கும் போது மன்மோகன் சிங் சென்றாலும், அங்கு செய்தியாளர்களை சந்திப்பார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க எப்போது தயங்கியது இல்லை. சில நேரங்களில் அமெரிக்க ஊடகங்கள் காட்டமான கேள்விகளை முன் வைப்பார்கள். அதனால் அந்த நாட்டில் இருக்கும் இந்திய அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பை தவிர்க்க சொன்னாலும், தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டவர் அவர்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...