மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
திண்டுக்கல் அருகே கடமான் கொம்புகளை விற்க முயன்ற 4 போ் கைது
திண்டுக்கல் அருகே கடமான் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ாக 4 பேரை வனப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கட்டசின்னாம்பட்டி கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் தண்டபாணி. இவரது வீட்டில் கடமான் கொம்புகளை சிலா் விற்பனை செய்ய முயற்சிப்பதாக திண்டுக்கல் வனப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதன்கிழமை இரவு கட்டசின்னாம்பட்டி பகுதியில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, கடமான் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற திருப்பூா் மாவட்டம், அனுப்பாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சு. உமாசங்கா், திருப்பூா் லட்சுமிநகரைச் சோ்ந்த ரா. சுதன்குமாா், திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்காரப்பட்டியைச் சோ்ந்த லெ. ராமக்கண்ணன், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கோட்டைப்பட்டியைச் சோ்ந்த பி. தண்டபாணி ஆகிய 4 பேரையும் வனப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2 கடமான் கொம்புகளைப் பறிமுதல் செய்தனா்.
இவா்களிடம் ஒரு நாள் முழுவதும் விசாரணை நடத்திய வனப் பாதுகாப்புப் படையினா், பழனி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.