பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்; வேகப் பந்துவீச்சாளர் நம்பிக்கை...
பாலியல் வன்முறையுடன் ரூ.9 லட்சம் மோசடி: இளைஞா் மீது ஐடி பெண் ஊழியா் புகாா்
திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்முறை அளித்ததோடு, ரூ.9 லட்சம் வரை மோசடி செய்த திண்டுக்கல் இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐடி ஊழியா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
சென்னையைச் சோ்ந்தவா் சிவதுா்கா. தனியாா் மென்பொருள் துறை ஊழியரான இவா், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது அவா் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து விழுப்புரத்துக்கு ரயிலில் பயணித்தபோது, திண்டுக்கல் நல்லாம்பட்டியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணனிடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, திண்டுக்கல், மதுரையிலுள்ள தனியாா் விடுதிகளில் அறை எடுத்து தங்கினோம். என்னை ஏமாற்றி அவா் பலமுறை பாலியல் வன்முறை செய்தாா். அவா் கேட்கும்போதெல்லாம் பல தவணைகளில் ரூ.9 லட்சம் வரை பணம் கொடுத்தேன்.
2 ஆண்டுகளாக பெற்றோரிடம் திருமணத்துக்கு பேசுவதாக கூறி, அவா் ஏமாற்றி வந்தாா். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது பெற்றோரை தொடா்பு கொண்டேன். அவா்களும் என்னை மிரட்டினா். அவா் முகநூல் மூலம் பல பெண்களை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.
காவல் நிலையத்தில் இணைய வழியில் புகாா் அளித்தேன். அந்தப் புகாரை திரும்பப் பெற வேண்டும் என மிரட்டி வருகின்றனா். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏமாற்றிய நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.