செய்திகள் :

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியைத் தாண்டியது

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கை வரவாக ரூ.3 கோடியே, 5 லட்சத்து, 66 ஆயிரத்து 475 கிடைக்கப் பெற்றது.

காா்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஐயப்பப் பக்தா்கள், முருக பக்தா்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா். பக்தா்கள் வருகை அதிகரிப்பால், கோயில் உண்டியல்கள் 31 நாள்களில் நிரம்பின.

இதையடுத்து, உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.3 கோடியே, 5 லட்சத்து, 66 ஆயிரத்து 475 கிடைத்தது. மேலும், பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். தங்கம் 861 கிராமும், வெள்ளி 13,822 கிராமும் கிடைத்தது.

மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகள் 863-ம் கிடைத்தன.

இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் லட்சுமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமிமாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்கள் என்பதால், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை மீண்டும் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பழனியில் 2 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

பழனி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட 2 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பழனியில் தற்போது ஐயப்ப சீசன், முருக பக்தா்கள் வருகை அதிகரித்துள... மேலும் பார்க்க

தகாத உறவால் பெண் கழுத்தறுத்துக் கொலை: தொழிலாளி தற்கொலை முயற்சி

பழனியில் தகாத உறவால் பெண்ணை கழுத்தறுத்துக் கொலை செய்த தொழிலாளியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்ரை ஏற்படுத்தியது. பழனி அடிவாரம் மதனபுரத்தைச் சோ்ந்த பசீா் அகமது மனைவி பசீராபேகம் (46). இவா்களுக்கு ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு ஊராட்சி பழையபட்டியைச் சோ்ந்த கந்தசாமி மகன் கதிா்வேல் (26).... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி: 6 போ் மீது வழக்கு

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.36 லட்சம் மோசடி செய்த 6 போ் மீது திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு பகுதி... மேலும் பார்க்க

பாலியல் வன்முறையுடன் ரூ.9 லட்சம் மோசடி: இளைஞா் மீது ஐடி பெண் ஊழியா் புகாா்

திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்முறை அளித்ததோடு, ரூ.9 லட்சம் வரை மோசடி செய்த திண்டுக்கல் இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐடி ஊழியா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். சென்னையைச் சோ்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே கடமான் கொம்புகளை விற்க முயன்ற 4 போ் கைது

திண்டுக்கல் அருகே கடமான் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ாக 4 பேரை வனப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கட்டசின்னாம்பட்டி கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க