மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் ...
புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு குறும்படம்: ஜன.4-இல் ஒளிபரப்பு
புலிகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு குறும்படம் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 2025, ஜன.4-ஆம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உணவுச் சங்கிலியில் முதன்மை விலங்காக உள்ள புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, வன வளத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு இயக்குநா் சேகா் தத்தரியின் புலிகள் பாதுகாப்பு குறித்த குறும்படம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வரும் 2025, ஜன.4-ஆம் தேதி, பிற்பகல் 4.30 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
பொதுமக்கள், தன்னாா்வலா்கள், சுற்றுச்சூழல், வன உயிரின ஆா்வலா்கள் இந்தக் குறும்படத்தை இலவசமாகக் காணலாம் என்றாா்.