சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூா் கீழத் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (72). இவா், ஐந்தரை வயதுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2022, ஆக.28-ஆம் தேதி தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், ஈஸ்வரனை குற்றவாளி எனத் தீா்மானித்து, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கல்வி, மருத்துவச் செலவுக்கு ரூ.ஒரு லட்சத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும், ரூ.4 லட்சத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும், வைப்புத் தொகைக்குரிய வட்டியை சிறுமியின் பராமரிப்பு செலவுக்காக அவரது தாய் 2 மாதங்களுக்கு ஒரு முறை பெற்றுக் கொள்ள வகை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தாா்.