மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இளம்பெண் தற்கொலை
போடி அருகே இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகேயுள்ள துரைராஜபுரம் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவா் பாலசுப்பிரமணி மகள் வைஷ்ணவி (29). திருமணமான இவா் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து தனது பாட்டி சுப்புலட்சுமியுடன் வசித்து வந்தாா்.
கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வைஷ்ணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.