செய்திகள் :

'பரதன்' பட இயக்குநர் SD சபா மறைவு: "அவரிடம் கற்றவை என் வாழ்க்கையை வழிநடத்தும்..." - நடிகர் அருள்தாஸ்

post image

விஜயகாந்த் நடித்த 'பரதன்', பிரபுதேவா நடித்த 'வி.ஐ.பி.' லிவிங்ஸ்டனுக்கு ஹீரோவாக திருப்பு முனை ஏற்படுத்திய 'சுந்தரபுருஷன்' உள்படப் பல படங்களை இயக்கிய எஸ்.டி. சபா, உடல் நலன் பாதிப்பினால் நேற்று (டிசம்பர் 26) காலமானார். ஏ.வி.எம். நிறுவனத்தில் அவர் இயக்கிய 'அ.ஆ.இ.ஈ' மற்றும் 'பதினாறு' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அருள்தாஸ். இப்போது வில்லன், குணச்சித்திர நடிகராகவும் பிஸியாக இருந்து வருகிறார். மறைந்த சபாவின் நினைவுகள் குறித்து இங்கே கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

சபா

''அவர் ஒரு பெரும் கலைஞன். நான் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த காலத்திலிருந்து சபா சாரை தெரியும். நல்லா பழகுவார். விஜயகாந்த் சாரை வைத்து அவர் இயக்கிய 'பரதன்' எனக்கு ரொம்ப பிடித்த படம். அந்த சமயத்தில் அவர் படங்களுக்கு ஒரு சின்ன இடைவேளை விட்டு, சின்னத்திரையில் பிஸியானார். 'காலேஜ் ரோடு', 'சிகரம்' என டி.வி. தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார். அதில் நான் உதவி ஒளிப்பதிவாளராகவும் இரண்டவது யூனிட் கேமராமேனாகவும் வேலை செய்திருக்கிறேன். அதன் பிறகு அவர் சினிமா பண்ணும் போது அவ்வப்போது கேமரா பண்ணக் கூப்பிடுவார். அவரிடம் நண்பராகப் பழகும் வாய்ப்பு அமைந்தது.

அவரிடம் உதவி இயக்குநராக இருந்தால் சீக்கிரமே டைரக்‌ஷனை கற்று விடலாம். சினிமாவில் கதை விவாதம் தொடங்கி, படப்பிடிப்பு, எடிட்டிங், கிராபிக்ஸ், இசைக்கோர்ப்பு, அனிமேஷன் என அத்தனை வேலைகளையும் அவரிடம் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் வேலை செய்தால் கூட கற்றுக்கொள்ள முடியும். எல்லோருக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார். கதை விவாதத்தின் போது 'இந்த சீன் சரியில்லை' என்று அவரது அசிஸ்டென்ட்கள் சொன்னால், முழு மனதோடு ஏற்றுக்கொள்வார்.

திடீரென்று ஒருநாள் அவர் என்னைக் கூப்பிட்டார். 'ஏ.வி.எம். தயாரிப்பில் ஒரு படம் பண்ணப்போறேன். தெலுங்கில் வெளியான ஒரு படத்தின் ரீமேக் அது. நீங்கதான் ஒளிப்பதிவு பண்ணப் போறீங்க' என்றார். ஏ.வி.எம்-ல் படம் பண்ண வேண்டும் என்பது திரையுலகில் உள்ள அனைவருக்குமே பெரும் கனவாக இருக்கும். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை அமைத்து கொடுத்தவர் சபா சார்தான். அவர் இயக்கிய படங்களில் எல்லாம் திரைப்பட கல்லூரியில் படித்தவர்கள் தான் ஒளிப்பதிவு செய்திருப்பார்கள். ஆனால், என்னை அவர் அழைத்து வேலை கொடுத்தார். திறமையை மதிப்பார்.

நடிகர் அருள்தாஸ்.

டைரக்‌ஷன் மட்டுமில்லாமல் டெக்னீஷியனாகவும் திறமைமிக்கவர். அவரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வது எளிதானது. என்ன ஃபிரேம், என்ன லென்ஸ், என்ன ஷாட் என எல்லா விபரங்களையும் அத்துப்படியாக வைத்திருப்பார். தொழில்நுட்பங்களில் அப்டேட் ஆக இருப்பார். பிரமாதமான டெக்னீஷியனும் கூட! சமீபகாலமாக அவர் படங்கள் இயக்க வில்லையே தவிர, எல்லாமே தெரிந்து வைத்திருப்பார். ஏ.ஐ. தொழில்நுட்பமும் சரி, டி.ஐ. அப்டேட்டும் சரி எதைப் பற்றி கேட்டாலும் விலாவாரியாக விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் சில ஆண்டுகளாக தெலுங்கில் படம் பண்ணும் வேலைகளிலிருந்தார். அங்கே ஒரு பெரிய படம் பண்ணுவதற்கான முயற்சிகளிலும் இருந்தார். சபா சாரிடம் நான் கற்றுக்கொண்டவை அதிகம். அவரிடம் கற்ற விஷயங்கள் என் வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க நண்பர்களுடன் திண்டிவனம் சென்று கொண்டிருக்கிறோம்.'' என்கிறார் கனத்த இதயத்துடன்...

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

”சத்யநாராயணனின் சிகிச்சை செலவு முழுவதையும் தலைவர் ரஜினி செலுத்தி விட்டார்”- ராஜேஸ்வரன் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை... மேலும் பார்க்க

Vidamuyarchi Exclusive: `ஆண்டோ, Folk Marley'னு அனிருத் கூப்பிடுவார்! - `சவதீகா' பற்றி ஆண்டனி தாசன்

அஜித் நடித்திருக்கும் `விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் முதல் சிங்கிளான `சவதீகா' பாடலை பின்னணி பாடகர் ஆண்டனி தாசன் பாடியிர... மேலும் பார்க்க

The Smile Man Review: சீரியல் கில்லரின் அட்டகாசம்; திகில் கிளப்புகிறதா சரத்குமாரின் 150வது படம்?

கோவையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) ஒரு விபத்தின் காரணமாக `அல்சைமர்ஸ்' எனப்படும் மறதி பாதிப்பு உண்டாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந... மேலும் பார்க்க

அலங்கு விமர்சனம்: டெக்னிக்கலாக மிரட்டும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர், எமோஷனலாகவும் நெகிழச் செய்கிறதா?

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் நாயகன் தர்மன் (குணாநிதி). நியாயத்துக்காக நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகத் தான் படிக்கும் பாலிடெக்னிக... மேலும் பார்க்க

திரு.மாணிக்கம் விமர்சனம்: நேர்மையான அந்தக் கதாபாத்திரத்துக்கு சல்யூட்... ஆனால் படத்துக்கு?

எளிய மனிதனின் நேர்மை படும் பாட்டையும், அதைக் காப்பதற்கான அவனின் போராட்டத்தையும் பேசுகிறார் இந்த 'திரு.மாணிக்கம்'.கேரள மாநிலம் குமுளியில் லாட்டரி கடையோடு சிறிய புத்தகக் கடையும் நடத்திவரும் மாணிக்கம் (ச... மேலும் பார்க்க

Vibe of 2024: `ராஜா, ரஹ்மான், அனி, ஷான் ரோல்டன்' - அதிகம் வைப் செய்த பாடல்கள்

மியூசிக் இல்லாமல் நமக்கெல்லாம் ஒரு நாளும் நகர்வதில்லை. Spotify, வின்க் மியூசிக், கானா என பல மியூசிக் ஆப்களைப் பயன்படுத்தி தினமும் பாடல்களைக் கேட்கிறோம்.சில நேரங்களில் நாமும் நம் பக்கத்து வீட்டுக்காரரு... மேலும் பார்க்க